பாலிவுட்டில் பிஸி!
தமிழில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா. இதில் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கும் "டெஸ்ட்', யூடியூபர் டியூட்விக்கி இயக்கும் "மண்ணாங்கட்டி', மோகன் ராஜா இயக்கும் "தனி ஒருவன் 2' உள்ளிட்ட படங்களும் அடங்கும். இதனிடையே பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அவர் நடித்த "ஜவான்' படம் வசூலில் வரலாறு படைத்து வருகிறது. இந்தியில் அவர் நடித்த முதல் படமே அமர்க்களமாக அமைந்ததால் தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகளும் தற்போது அவருக்கு வரத்தொடங்கியுள்ளது. அதன்படி பிரபல இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கவுள்ள ’"பைஜு பாவ்ரா'’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வர... அதற்கு பச்சை கொடி காட்டியுள்ளாராம். இதற்காக பெரிய தொகை சம்பளமாக நயன்தாராவுக்கு பேசப்பட்டுள்ளது. இப்படம் 1952 வெளியான "பைஜு பாவ்ரா' படத்தின் ரீமேக். அதே தலைப்பில் ரீமேக்கானாலும் இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக ரன்வீர்சிங்கும், ஹீரோயினாக ஆலியாபட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_249.jpg)
க்ரீன் சிக்னல்!
ஒருவழியாக அஜித்தின் "விடாமுயற்சி' படக்குழு, சமீபத்தில் அஜர்பைஜானில் படப்பிடிப்பை தொடங்கி நடத்திவந்தது. படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறாராம். அதில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக த்ரிஷாவும், இன்னொரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ரெஜினா கெஸாண்ட்ராவும் நடிக்கிறார்களாம். இந்த நிலையில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் சூழல் இருக்கிறதாம். இஸ்ரேல் -பாலஸ்தீன் போர் அஜர்பைஜானிலும் எதிரொலிக்கும் என கூறப்படுவதால் படக்குழு சென்னைக்கு திரும்ப முடிவெடுத்துள்ளதாம். அதனால் அடுத்து என்ன செய்வது என்ற பிளானையும் தற்போது படக்குழு திட்டம் தீட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சுவாரசியமான ஒரு சம்பவம் நடந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் பகிர்ந்துள்ளன. அஜித்தின் அடுத்த பட இயக்குநராக ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளாராம். சமீபத்தில் விஷாலை வைத்து அவர் இயக்கிய "மார்க் ஆண்டனி' படம் எதிர்பார்த்ததை விட வசூலில் வரவேற்பு பெற்றதால் அஜித்தின் பார்வை அவர் மேல் பட்டுள்ளது. அதனால் அவரை கூப்பிட்டு ஒரு கதை கேட்க, உடனே க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம் அஜித். இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறாராம். ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதும், அந்த காரணத்தால்தான் அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமீர்கானுக்கு ஜோடி!
தமிழில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஜொலித்த ஜெனிலியா, தற்போது இந்தி மற்றும் மராத்தியில் அதிக கவனம் செலுத்திவருகிறார். அதன் பலனாக தற்போது பாலிவுட்டில் கான் நடிகர்களில் ஒருவரான அமீர்கானுக்கு ஜோடியாக நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். "லால் சிங் சத்தா' பட தோல்விக்கு பிறகு அமீர்கான் நடிக்கவுள்ள படம் "சித்தாரே சமீன் பார்' (நண்ற்ஹஹழ்ங் ழஹம்ங்ங்ய் டஹழ்). இப்படத்தை ஆர்.எஸ்.பிரசன்னா இயக்குகிறார். இவர் தமிழில் 'கல்யாண சமையல் சாதம்' படத்தை எடுத்தவர். இப்படம் கூடைப்பந்து விளையாட்டை மையப்படுத்தி ஸ்பேனிஷில் வெளியான "சாம்பியன்ஸ்' படத்தின் தழுவலாக உருவாகிறது. இதில்தான் தற்போது ஜெனிலியா கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம்.
சென்னையில் ஷுட்டிங்!
விஜய்சேதுபதி தற்போது தமிழில் வெற்றிமாறன் இயக்கும் "விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுககுமார் இயக்கத்தில் புது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படம் கமிட்டாகியுள்ள நிலையில் அதன் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் முடிந்து, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், சென்னையில் அடுத்த மாத இறுதியில் முதற்கட்ட படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். இப்படத்தை தாணு தயாரிக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடந்துவந்தது... அது இன்னும் முடிவுக்கு வரவில்லையாம். மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி ரிலீஸாகாமல் உள்ள "பிசாசு 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-10/cinema-t_4.jpg)